​​ காங்கிரஸ் தலைவரான ராகுல்காந்தி தனக்கும் தலைவர்தான்: சோனியாகாந்தி
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காங்கிரஸ் தலைவரான ராகுல்காந்தி தனக்கும் தலைவர்தான்: சோனியாகாந்தி

காங்கிரஸ் தலைவரான ராகுல்காந்தி தனக்கும் தலைவர்தான்: சோனியாகாந்தி

Feb 08, 2018 3:41 PM

காங்கிரஸ் தலைவரான ராகுல்காந்தி தனக்கும் தலைவர்தான் என சோனியாகாந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் சோனியா காந்தி பேசினார்.

அப்போது காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி தனக்கும் தலைவர் எனக் குறிப்பிட்டதுடன், ராகுல்காந்தி மீது அனைவரும் நம்பிக்கை வைத்து அவருக்கு ஆதரவளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

பாஜக ஆட்சியில் தலித்கள் தாக்கப்படுவதாகவும், அரசியல் எதிரிகளைப் பழிவாங்கப் புலனாய்வுத் துறையைப் பயன்படுத்துவதாகவும் சோனியா காந்தி குற்றஞ்சாட்டினார்.