​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சேப்பாக்கம் மைதான நுழைவு வாயிலுக்கு பூட்டு போட முயற்சி - தமிழக வாழ்வுரிமை கட்சியினரை கைது

Published : Apr 10, 2018 6:09 PM



சேப்பாக்கம் மைதான நுழைவு வாயிலுக்கு பூட்டு போட முயற்சி - தமிழக வாழ்வுரிமை கட்சியினரை கைது

Apr 10, 2018 6:09 PM

இன்று கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ள சேப்பாக்கம் மைதானத்தின் நுழைவாயிலை பூட்டு போட்டு மூட முயன்ற தமிழக வாழ்வுரிமை கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், சேப்பாக்கத்தில் கிரிக்கெட் போட்டியை நடத்தக்கூடாதென தமிழக வாழ்வுரிமை கட்சியனர் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சேப்பாக்கம் மைதானத்தின் அருகேயுள்ள திருவல்லிக்கேணி ரயில் நிலையத்திலிருந்து பயணிகளோடு பயணிகளாக வந்த தமிழக வாழ்வுரிமை கட்சியைச் சேர்ந்த 10 பேர், திடீரென அக்கட்சியின் கொடியை கையில் ஏந்திக்கொண்டு மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கமிட்டவாறே சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தின் முதல் நுழைவு வாயிலுக்கு பூட்டுபோட முயற்சித்தனர்.

இதனைக் கண்ட போலீசார், அவர்கள் அனைவரையும் தடுத்து பூட்டு போடாமல் செய்தனர். பின்னர் சேப்பாக்கம் மைதானத்தை பூட்ட முயன்ற அனைவரையும் கைது செய்து திருவல்லிக்கேணி காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.