​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் உரிமம் புதுப்பித்தலுக்கான விண்ணப்பம் நிராகரிப்பு

Published : Apr 10, 2018 6:09 PM



தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் உரிமம் புதுப்பித்தலுக்கான விண்ணப்பம் நிராகரிப்பு

Apr 10, 2018 6:09 PM

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதற்கான அனுமதியை  புதுப்பிக்க கோரும் விண்ணப்பம் மாசு கட்டுபாட்டு வாரியத்தால் நிராகரிக்கப்பட்டு விட்டதாக, வேதாந்தா நிறுவனம் தெரிவித்துள்ளது. 

பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனம் என்கிற வகையில், பங்குச்சந்தை ஒழுங்குமுறை வாரிய விதிகளின்படி, வேதாந்தா நிறுவனம் மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகளுக்கு ஸ்டெர்லைட்டின் தற்போதைய நிலை குறித்த தகவலைத் தெரிவித்துள்ளது.

அதில், தூத்துக்குடியில் உள்ள உருக்காலை இயங்குவதற்கான அனுமதியை புதுப்பிக்க விண்ணப்பித்ததாகவும், ஆனால் கூடுதல் விளக்கங்கள் கேட்டு அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருவதாகவும் வேதாந்தா நிறுவனம் கூறியுள்ளது. ஏற்கெனவே மார்ச் 27ஆம் தேதி தெரிவித்த, 15 நாட்களுக்கான ஆலை பராமரிப்பு பணி காலம் தற்போது மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் வேதாந்தா நிறுவனம் தெரிவித்துள்ளது.