​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தேர்தல் பிரச்சாரத்தில் நடிகை ஜெயப்பிரதா கண்ணீர் விட்டு கதறல்

Published : Apr 04, 2019 9:30 AM

தேர்தல் பிரச்சாரத்தில் நடிகை ஜெயப்பிரதா கண்ணீர் விட்டு கதறல்

Apr 04, 2019 9:30 AM

உத்தரப்பிரதேச மாநிலம் ராம்புர் தொகுதியில் போட்டியிடும் நடிகை ஜெயப்பிரதா மேடையில் கண்ணீர் விட்டு அழுதார்.

தாம் ராம்புரை விட்டுச் செல்ல விரும்பவில்லை என்றும் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அசாம் கான் குண்டர்களை ஏவி தம்மீது தாக்குதல் நடத்தியதாகவும் கூறிய ஜெயப்பிரதா தமது முகத்தில் ஆசிட் வீசிவிடுவார்கள் என்ற அச்சத்தால்தான் ராம்புரை விட்டுச் சென்றதாக கூறினார்.

 

தமது 67வது பிறந்தநாள் பரிசாக இந்தத் தொகுதியில் தமக்குப் போட்டியிட பாஜக வாய்ப்பளித்ததாக நன்றி தெரிவித்தார். 2004 மற்றும் 2009ம் ஆண்டுகளில் சமாஜ்வாதி வேட்பாளராகப் போட்டியிட்டு வென்ற ஜெயப்பிரதா இம்முறை சமாஜ்வாதி வேட்பாளராகப் போட்டியிடும் அசாம் கானை எதிர்த்து பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.