​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ரன்வீர் சிங்குக்கு தாதா சாகேப் பால்கே எக்சலன்ஸ் விருது..!

Published : Apr 10, 2018 11:51 AM

ரன்வீர் சிங்குக்கு தாதா சாகேப் பால்கே எக்சலன்ஸ் விருது..!

Apr 10, 2018 11:51 AM

பாலிவுட் நட்சத்திரங்கள் ரன்வீர் சிங், அனுஷ்கா ஷர்மா ஆகியோர் தாதா சாகேப் பால்கே எக்சலன்ஸ் விருதுக்கு தேர்வாகியுள்ளனர்.

தாதா சாகேப் பால்கே பெயரில் மும்பையில் இயங்கும் ஒரு அமைப்பு, இந்த விருதை வழங்குகிறது. பத்மாவத் திரைப்படத்தில் நடித்ததற்காக ரன்வீர் சிங்கை, தாதா சாகேப் பால்கே எக்சலன்ஸ் விருதுக்காக தேர்வு செய்துள்ளது. இதற்காக ரன்வீர் சிங்குக்கு அனுப்பிய கடிதத்தில், பத்மாவத் திரைப்படத்தில் மொகலாய மன்னர் அலாவுதீன் கில்ஜியாக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதாக வாழ்த்தியுள்ளது.

பாலிவுட் நடிகையும், கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் காதல் மனைவியுமான அனுஷ்கா ஷர்மாவும் இந்த விருதுக்கு தேர்வாகியுள்ளார். என்.ஹெச். 10 திரைப்படத்தில் நடித்ததற்காக அவருக்கு விருது வழங்கப்படுகிறது.