​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஃபேஸ்புக் நேரலை வீடியோக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க திட்டம்

Published : Mar 30, 2019 1:32 PM

ஃபேஸ்புக் நேரலை வீடியோக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க திட்டம்

Mar 30, 2019 1:32 PM

பயனர்கள் தங்களது நேரலை வீடியோக்களை பகிர, புதிய கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாக ஆலோசித்துவருவதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அண்மையில் நியூசிலாந்தின் இரு மசூதிகளில் நடத்தப்பட்ட கொலைவெறி துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் ஃபேஸ்புக் நேரலையில் வெளியிடப்பட்டதையடுத்து இந்த முடிவானது எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், எடிட் செய்யப்பட்டு வெளியிடப்படும் வன்முறை தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை உடனடியாக அடையாளம்கண்டு, அவற்றை நீக்க, புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தவுள்ளதாகவும் அந்நிறுவன தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.