​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மதுபோதையில் அரசு பேருந்து கண்ணாடியை கல்லால் உடைத்த இளைஞருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

Published : Mar 29, 2019 4:23 PM

மதுபோதையில் அரசு பேருந்து கண்ணாடியை கல்லால் உடைத்த இளைஞருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

Mar 29, 2019 4:23 PM

மதுரையில் மதுபோதையில் அரசு பேருந்து கண்ணாடியை கல்லால் அடித்து உடைத்த இளைஞரை பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். ஆர்.எஸ்.மங்கலத்தில் இருந்து மதுரை நோக்கி சென்ற அரசு பேருந்து, பாண்டிகோவில் பேருந்து நிலையத்தில் பயணிகள் ஏறுவதற்காக நின்றது.

அப்போது மதுபோதையில் பேருந்தில் ஏரிய இளைஞர், நடத்துனரிடம் டிக்கெட் எடுக்க முடியாது என கூறி, தகராறு செய்துள்ளார். இதனால் பேருந்தை நிறுத்தி போதையில் இருந்த இளைஞரை நடத்துனர் கீழே இறக்கிவிட்டுள்ளார்.

அப்போது அருகில் இருந்த கல்லை எடுத்து பேருந்து கண்ணாடியை அடித்து உடைத்து விட்டு, தப்பியோட முயன்ற போதை இளைஞரை பொதுமக்கள் மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

பின்னர் அங்கு வந்த போலீசார் மதுபோதை தலைக்கேறிய படி இருந்த இளைஞரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.