​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அமமுகவுக்கு சின்னம் ஒதுக்குவது தொடர்பாக தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும் - சத்யபிரதா சாகு

Published : Mar 27, 2019 2:31 PM

அமமுகவுக்கு சின்னம் ஒதுக்குவது தொடர்பாக தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும் - சத்யபிரதா சாகு

Mar 27, 2019 2:31 PM

அமமுகவிற்கு சின்னம் ஒதுக்குவது தொடர்பாக, இந்திய தேர்தல் ஆணையமே இறுதி முடிவு எடுக்கும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார்.

சென்னை, தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகம் முழுவதும் ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 46 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் சத்யபிரதா சாகு தெரிவித்தார்.

பறக்கும் படையினர் மற்றும் நிலை கண்காணிப்புக் குழுவினர் 2,000க்கும் மேற்பட்ட குழுக்களாக பிரிந்து தொடர் சோதனையில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

வேட்புமனுக்கள் வாபஸ் பெறுவதற்கான கால அவகாசம் வரும் 29ஆம் தேதி நிறைவடையும் நிலையில் அதற்கு பிறகு சுயேட்சைகளுக்கு சின்னங்கள் ஒதுக்கும் பணி நடைபெறும் எனவும் அவர் கூறினார்.

அமமுகவுக்கு பொதுச்சின்னம் ஒதுக்குவது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையமே இறுதி முடிவை எடுக்கும் எனவும் சத்யபிரதா சாகு தெரிவித்தார்.