​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குடும்பத்தினர் கடப்பதற்கு சாலையை மறித்த வான்கோழி

Published : Mar 27, 2019 7:15 AM



குடும்பத்தினர் கடப்பதற்கு சாலையை மறித்த வான்கோழி

Mar 27, 2019 7:15 AM

அமெரிக்காவில் வான்கோழி ஒன்று தனது கூட்டம் சாலையைக் கடப்பதற்காக போக்குவரத்தை நிறுத்திய சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நியூ இங்கிலாந்து பகுதியில் உள்ள நியூ ஹாம்ப்ஷையர் என்ற இடத்தில் ஏராளமான காட்டு வான்கோழிகள் உள்ளன. இந்தப் பகுதியில் செல்லும் சாலையைக் வான்கோழிக் குடும்பம் ஒன்று கடக்க முயன்றது. அதற்காக ஆண் வான்கோழி தனது தோகையை விரித்து சாலையை மறித்தபடி நின்றது. இதையடுத்து 10க்கும் மேற்பட்ட வான்கோழிகள் சென்ற பின்னர் இறுதியாக அந்த ஆண் வான்கோழி சென்றது.

இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவை மும்பை போலீசார் போக்குவரத்து விதிகள் குறித்த புரிதலுக்காக பரப்பி வருகின்றனர்.