​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் நடிகர் சத்ருகன்சின்ஹா

Published : Mar 27, 2019 7:11 AM

காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் நடிகர் சத்ருகன்சின்ஹா

Mar 27, 2019 7:11 AM

பாஜக எம்பியான சத்ருகன் சின்ஹாவுக்கு இந்த முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படாக நிலையில் நாளை அவர் காங்கிரஸ் கட்சியில் இணையப் போவதாக அறிவித்துள்ளார்.

கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் பாட்னா சாகிப் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சத்ருகன் சின்ஹா, பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து வந்தார். இந்நிலையில், பாட்னா சாகிப் தொகுதி மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சத்ருகன்சின்ஹா தமது அதிருப்தியை வெளிப்படையாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், சத்ருகன் சின்ஹா காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாகவும், ரவிசங்கர் பிரசாத்தை எதிர்த்து பாட்னா சாகிப் தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.