​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கோவாவில் தேர்தல் பரப்புரைக்கு புதிய கட்டுப்பாடு..!

Published : Mar 26, 2019 3:28 PM

கோவாவில் தேர்தல் பரப்புரைக்கு புதிய கட்டுப்பாடு..!

Mar 26, 2019 3:28 PM

கோவாவில் புனித வெள்ளி தினத்தன்று தேவாலயங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் தடைவிதித்துள்ளது.

கிறிஸ்துவர்களின் புனித பண்டிகையான அந்த தினத்தில் அதிக அளவிலான மக்கள் தேவாலயங்களில் கூடுவார்கள் என்பதால் அவர்களின் மத உணர்வுக்கு மதிப்பளிக்கும் விதமாகவும், சட்ட- ஒழுங்கு மீறல் சம்பவங்கள் நடக்காமல் தடுக்கும் முயற்சியாகவும் அந்தப் பகுதிகளில் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் வைக்கப்பட்ட கோரிக்கைகளையடுத்து தேர்தல் ஆணையம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கோவாவில் இரண்டு மக்களவை தொகுதிகளுக்கான தேர்தலுடன் சேர்த்து 3 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.