​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
எம்.எம். ஜோஷி போட்டியிடாததன் பின்னணி குறித்து புதிய தகவல்

Published : Mar 26, 2019 2:03 PM

எம்.எம். ஜோஷி போட்டியிடாததன் பின்னணி குறித்து புதிய தகவல்

Mar 26, 2019 2:03 PM

மக்களவைத் தேர்தலில் போட்டியிடவேண்டாம் என கட்சியின் தலைமை நிர்பந்தித்ததாலேயே பாஜக மூத்த தலைவர் முரளிமனோகர் ஜோஷி தேர்தலில் போட்டியிடவில்லை எனக் கூறப்படுகிறது.

மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியல் மற்றும் தேர்தல் நட்சத்திர பரப்புரையாளர்கள் பட்டியலில் அவரது பெயர் புறக்கணிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மக்களவை தேர்தலில் அப்போதைய பாஜக வேட்பாளரும், தற்போதைய பிரதமருமான மோடி போட்டியிடுவதற்காக தனது வாரணாசி மக்களவை தொகுதியையே ஜோஷி விட்டுக்கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.