​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கிறிஸ் கெய்ல் அதிரடி ஆட்டத்தால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி

Published : Mar 26, 2019 7:09 AM

கிறிஸ் கெய்ல் அதிரடி ஆட்டத்தால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி

Mar 26, 2019 7:09 AM

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

ஜெய்ப்பூரில் நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட் செய்த பஞ்சாப் அணியின் கிறிஸ் கெயில் 47 பந்துகளில் 79 ரன்களை விளாசினார்.

20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது. சர்ஃராஸ் கான் 46 ரன்களும், மயங்க் அகர்வால் 22 ரன்களும் சேர்த்தனர்.

185 ரன்கள் வெற்றி இலக்குடன் ஆடத் தொடங்கிய ராஜஸ்தான் அணியின் பட்லர் 69 ரன்களும், சாம்சன் 30 ரன்களும் எடுத்தனர்.

20 ஓவர்கள் முடிவில் அந்த அணிய 9 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்ததால் 14 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.