​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழகத்தில் தேர்தல் பறக்கும் படை வாகன சோதனையின் போது டெட்டனேட்டர்கள் உள்ளிட்ட பொருட்கள் சிக்கின

Published : Mar 21, 2019 2:08 PM

தமிழகத்தில் தேர்தல் பறக்கும் படை வாகன சோதனையின் போது டெட்டனேட்டர்கள் உள்ளிட்ட பொருட்கள் சிக்கின

Mar 21, 2019 2:08 PM

தமிழகத்தில் தேர்தல் பறக்கும் படை வாகன சோதனையின் போது டெட்டனேட்டர்கள் உள்ளிட்ட பொருட்கள் சிக்கின

எழும்பூர்:

எழும்பூர் காந்தி - இர்வின் பாலம் அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆட்டோவில் வந்த ரிச்சித் தெருவைச் சேர்ந்த வியாபாரி விவேக் என்பவரிடமிருந்து உரிய ஆவணங்களின்றி 3 பார்சலகளில் எடுத்து வரப்பட்ட 750 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நுங்கம்பாக்கத்தில் உள்ள அரசு கருவூலத்தில் அவை ஒப்படைக்கப்பட்டன.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் முதலியார் குப்பம் என்ற இடத்தில் தேர்தல் பறக்கும் படையினர் வேன் ஒன்றில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 3 கோடியே 2 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். அந்தப் பணம் செய்யூர் வட்டாட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டு கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளது. விசாரணையில் அந்தப் பணம் சென்னையிலிருந்து ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியில் இருந்து பாண்டிச்சேரிக்கு எடுத்துச் செல்லப்பட்டது தெரியவந்துள்ளது. 

image

தஞ்சை:

தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் பெங்களூரில் இருந்து வந்து கும்பகோணம் நோக்கி சென்ற ஆம்னி பேருந்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். பொருட்கள் வைக்கும் இடத்தில் 8 மூட்டைகளில் இருந்த குத்து விளக்குகள், மணிகளை அவர்கள் கைப்பற்றினர். இது தொடர்பாக கும்பகோணத்தைச் சேர்ந்த வானதி மெட்டல்ஸ் என்ற நிறுவனத்தின் உரிமையாளரான நாகராஜன் என்பவரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டபோது 2 முட்டைகளுக்கு ஆவணங்கள் காட்டப்பட்டன. எஞ்சிய 6 மூட்டைகளை கைப்பற்றிய அதிகாரிகள் அவற்றை கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். அவற்றின் மதிப்பு 6 லட்சம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

image

திருவண்ணாமலை :

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த கொடியாலம் கிராமத்தில் தேர்தல் அதிகாரிகளும் காவல்துறையினரும் டிராக்டர் ஒன்றை சோதனையிட்ட போது அதில் அனுமதியின்றி டெட்டனேட்டர்கள் ஜெலட்டின் குச்சிகள் உள்ளிட்டவை கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து டிராக்டரில் வந்த சேகரின் வீட்டில் சோதனையிட்ட போது அங்கும் வெடி பொருட்கள் இருந்தன. மொத்தம் 326 ஜெலட்டின் குச்சிகள், 522 டெட்டனேட்டர்களை பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் சேகரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

image

நெல்லை:

நெல்லை மாவட்டம்  உடையார்பட்டியில் வட்டாட்சியர் திருமலைமுருகன் தலைமையில் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனை நடத்தினர்.  ஏடிஎம் மையத்தில் பணம் நிரப்ப சென்ற தனியார் வேனை மறித்து சோதனையிட்டபோது, 68 லட்சம் ரூபாய் இருந்தது.

இதில் 12 லட்சம் பணத்துக்கு உரிய ஆவணம் இல்லாததையடுத்து பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதேபோல் மகராஜநகர் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தியபோது, காரில் வந்தவரிடம் உரிய ஆவணமில்லாததால் 5 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.