​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வேட்பாளர் அறிமுக கூட்டத்துக்கு தாமதமாக வந்த அதிமுக வேட்பாளர்

Published : Mar 21, 2019 11:34 AM

வேட்பாளர் அறிமுக கூட்டத்துக்கு தாமதமாக வந்த அதிமுக வேட்பாளர்

Mar 21, 2019 11:34 AM

வேட்பாளர் அறிமுக கூட்டத்துக்கு அதிமுக வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தாமதமாக வந்ததால், பெரும்பாலான நிர்வாகிகள் திரும்பிச் சென்றனர்.

திருவண்ணாமலை மக்களவை தொகுதியின் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம், அந்த தொகுதிக்கு உட்பட்ட வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் நடந்தது. அமைச்சர் கே.சி.வீரமணி முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டம் மாலை 4 மணிக்கு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி இரவு 9.30 மணிக்குமேல் தான் அங்கு வந்தார்.

image

காலதாமதத்தால் பெரும்பாலான நிர்வாகிகள், தொண்டர்கள் அரங்கில் இருந்து சென்று விட்டனர். இந்நிலையில், அங்கு வந்த வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தாமதமாக வந்ததற்கு மன்னிப்பு கேட்பதாக கூறினார்.