​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக உருவான அமைப்பு

Published : Mar 19, 2019 6:23 PM

பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக உருவான அமைப்பு

Mar 19, 2019 6:23 PM

பொள்ளாச்சி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவும் வகையில் பாலியல் வன்முறைக்கு எதிரான முறையீட்டுக் குழு என்ற அமைப்பை பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெண்கள் உருவாக்கியுள்ளனர்.

இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக தமிழகத்தின் முன்னாள் டிஜிபி திலகவதி உள்ளார். அவர் சென்னை சேப்பாக்கத்தில் அமைப்பின் நிர்வாகிகளுடன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, பொள்ளாச்சியில் பாலியல் கொடுமைக்குள்ளான பெண்கள், 99943 68566 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தைரியமாக புகார் அளிக்கலாம் எனத் தெரிவித்தார்.

ஒரு குழு பொள்ளாச்சியில் நேரடியாக களமிறங்குவதாகக் கூறிய அவர், வழக்கு விசாரணையின் தீர்ப்பு சாதகமாக இல்லை என்றால் முறையீடு செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.