​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தோனிக்கும், கோலிக்கும் கருத்து வேறுபாடா? ரவி சாஸ்திரி விளக்கம்

Published : Mar 16, 2019 11:15 AM

தோனிக்கும், கோலிக்கும் கருத்து வேறுபாடா? ரவி சாஸ்திரி விளக்கம்

Mar 16, 2019 11:15 AM

தோனிக்கும், விராட் கோலிக்கும் இடையே நல்ல புரிந்துணர்வு இருப்பதாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் நட்சத்திர வீரர் மகேந்திரசிங் தோனி கடந்த 2014 ஆம் ஆண்டு, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் தோல்வியால், டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகினார். 

அதே போன்று, கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தனது கேப்டன் பதவியை துரந்து, ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தொடர்ந்து ஒரு வீரராக விளையாடுவேன் என பேட்டியளித்தார். அதன்பின், அவர் தொடர்ந்து ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறார்.

மகேந்திர சிங் தோனிக்கும், கேப்டன் விராட் கோலிக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக கடந்த சில நாட்களாகவே கூறப்பட்டு வந்தது. 

இந்த நிலையில், இதனை முற்றாக மறுத்துள்ள பயிற்சியாளர் ரவிசாஸ்திரி,  அவர்கள் இருவரின் நோக்கமும்  அணியின் வெற்றி தான் என தெரிவித்துள்ளார்.

மேலும், ஒருவருக்கொருவர் அவர்களுக்கு உரிய மரியாதையை பரஸ்பரம் வழங்கிக்கொள்வதாகவும் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.