​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மக்களவை தேர்தலால் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நாட்கள் அதிகரிப்பு

Published : Mar 16, 2019 11:05 AM

மக்களவை தேர்தலால் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நாட்கள் அதிகரிப்பு

Mar 16, 2019 11:05 AM

மக்களவை தேர்தல் காரணமாக இந்த ஆண்டு பள்ளிகளுக்கு கோடை விடுமுறையின் நாட்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், கோடை விடுமுறை நாட்களின் எண்ணிக்கை சுமார் 50 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. 1 முதல் 9ம் வகுப்பு வரை ஏப்ரல் 13ம் தேதியுடன் தேர்வுகள் முடிவடைந்து, ஏப்ரல் 14ம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது.

கோடை விடுமுறைக்கு பின்னர், மீண்டும் ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில், பள்ளிகள் திறக்கப்படும் அன்றே புதிய பாடப் புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.