​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருமயம் அருகே களைகட்டிய மாட்டுவண்டி பந்தயம்

Published : Mar 16, 2019 10:56 AM

திருமயம் அருகே களைகட்டிய மாட்டுவண்டி பந்தயம்

Mar 16, 2019 10:56 AM

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள பரளியில் மாட்டுவண்டி பந்தயம் மிகவும் உற்சாகமாக நடைபெற்றது. அங்குள்ள அய்யனார் கோயில் திருவிழாவை  முன்னிட்டு நடந்த இந்த மாட்டுவண்டி பந்தயத்தில், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மாடுகள் கலந்துகொண்டன.

மாடுகள் பல்வேறு வகைகளாக பிரிக்கப்பட்டு இந்த போட்டிகளில் கலந்துகொண்டன. சாலையில் வீறுகொண்டு ஓடிய காளைகளை ஏராளமான மக்கள் ஆரவாரத்துடன் பார்த்து மகிழ்ந்தனர். போட்டியின் முடிவில் வெற்றி பெற்ற மாட்டுவண்டி உரிமையாளர்களுக்கு கோப்பை மற்றும் ரொக்க பணம் பரிசுகளாக வழங்கப்பட்டன.