​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஈரோடு மக்களவைத் தொகுதியில் மதிமுக சார்பில் கணேசமூர்த்தி போட்டி

Published : Mar 16, 2019 10:47 AM

ஈரோடு மக்களவைத் தொகுதியில் மதிமுக சார்பில் கணேசமூர்த்தி போட்டி

Mar 16, 2019 10:47 AM

தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள ம.தி.மு.க சார்பில் ஈரேடு தொகுதியில் கணேச மூர்த்தி போட்டியிடுவார் என்று வைகோ அறிவித்துள்ளார்.

தொகுதி பங்கீடு:

மக்களவைத் தேர்தலில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், இந்திய ஜனநாயகக் கட்சி ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

இதில் திமுக 20 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி புதுச்சேரி உட்பட 10 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் தலா இரண்டு இடங்களில் போட்டியிடுகின்றன. மதிமுகவுக்கு ஒரு மக்களவைத் தொகுதி மற்றும் மாநிலங்களவை சீட் ஒதுக்கப்பட்டது. 

தேர்தல் பணிகள் தீவிரம்:

ஏப்ரல் 18ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில், அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பணிகளில் விறுவிறுப்பாக ஈடுப்பட்டு வருகின்றனர். 

திமுக தங்களது கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளை நேற்று அறிவித்தது. 

image

image

image

மதிமுக வேட்பாளர் அறிவிப்பு:

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஈரோடு தொகுதியில் ம.தி.மு.க. பொருளாளர் கணேச மூர்த்தி போட்டியிடுவதாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த 2009-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஈரோடு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை வென்ற கணேச மூர்த்தி, கடந்த மக்களவைத் தேர்தலில் அதே ஈரோடு மக்களவைத் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் செல்வகுமார் சின்னையனிடம் தோல்வி அடைந்தார்.

இவர் 1998-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பழனி தொகுதியில் வெற்றி பெற்ற நிலையில் 2006-ஆம் ஆண்டு வெள்ளக்கோவில் சட்டமன்ற தொகுதியில் தோல்வியைத் தழுவினார்.

ஸ்டாலினுடன் இ.கம்யூ வேட்பாளர் சந்திப்பு:

இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் எம். செல்வராஜ், கே.சுப்பராயன் ஆகியோர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப்பெற்றனர். 

image

image