​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துடன் இணைந்த சோயுஸ் விண்கலம்

Published : Mar 16, 2019 9:39 AM

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துடன் இணைந்த சோயுஸ் விண்கலம்

Mar 16, 2019 9:39 AM

ரஷ்யாவில் இருந்து புறப்பட்ட சோயுஸ் விண்கலம் சர்வதேச விண்கலத்துடன் வெற்றிகரமாக இணைக்கப்பட்டது. உலகின் பல்வேறு நாடுகள் இணைந்து சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை செயல்படுத்தி வருகின்றன.

இங்கு பன்னாட்டு வீரர்கள் தங்கியிருந்து ஆய்வுகளை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ரஷ்யாவில் சோயுஸ் விண்கலம் மூலம் இரு வீரர்களை மையத்திற்கு அனுப்பும் பணிகள் தோல்வியடைந்தன.

இதனையடுத்து இரு அமெரிக்கர்கள் மற்றும் ஒரு ரஷ்யர் என 3 வீரர்கள் நேற்று மீண்டும் சோயுஸ் விண்கலம் மூலம் புறப்பட்டுச் சென்றனர். இவர்கள் சரியான நேரத்தில் விண்வெளி ஆய்வு மைத்தில் இணைந்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.