​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மாசு குறைந்த பட்டாசுகளைத் தயாரிக்க உற்பத்தியாளர்கள் முடிவு

Published : Mar 16, 2019 8:07 AM

மாசு குறைந்த பட்டாசுகளைத் தயாரிக்க உற்பத்தியாளர்கள் முடிவு

Mar 16, 2019 8:07 AM

பட்டாசு உற்பத்திக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை நீக்குவது தொடர்பான வழக்கில் மாசு குறைந்த பட்டாசு தயாரிக்க உற்பத்தியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

நாடு முழுவதும் பட்டாசு உற்பத்தி, விற்பனைக்கு தடை விதிக்கக்கோரிய வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் அதிக சுற்றுச்சூழல் சீர்கேட்டை ஏற்படுத்தும் வேதிப்பொருட்கள் இல்லாமல் பசுமை பட்டாசை தயாரிக்க வேண்டும் என்பது போன்ற கட்டுப்பாடுகளை உச்ச நீதிமன்றம் விதித்தது.

இந்த உத்தரவில் திருத்தம் செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை நடந்தது. அப்போது, நீரி எனப்படும் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் மையம் பரிந்துரைத்த மூலப்பொருட்களை கொண்டு பட்டாசு தயாரிப்பது பற்றி விளக்கப்பட்டது.

இதனை ஏற்று மாசு குறைந்த பட்டாசு தயாரிக்க பட்டாசு உற்பத்தியாளர்கள் தரப்பில் ஒப்புக் கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை அடுத்த மாதம் 3ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.