​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நீலகிரியில் நிலவும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடால் மக்கள் அவதி

Published : Mar 16, 2019 6:50 AM

நீலகிரியில் நிலவும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடால் மக்கள் அவதி

Mar 16, 2019 6:50 AM

நீலகிரி மாவட்டத்தில் நிலவும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு காரணமாக பல கிலோமீட்டர் தூரம் வரை சென்று குடிநீர் சுமந்து வரும் அவல நிலைக்கு மக்கள் ஆளாகியுள்ளனர்.

உதகை,குன்னூர் நகரம் மற்றும் லவ்டல், கேத்தி போன்ற சுற்றுவட்டார பகுதிகளில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பல கிலோமீட்டர் தூரம்வரை சென்று குடிநீர் சுமந்து வரும் நிலை காணப்படுகிறது.

தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக ஒரு குடம் தண்ணீர் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யும் நிலையும் உள்ளது. இந்நிலையில் குன்னூர் நகரப்பகுதிக்கு குடிநீர் வழங்கும் ரேலியா அணையில் இருந்து 2 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் திறந்து விட வேண்டும் என்றும் கோடைகாலத்திற்கு மாற்று ஏற்பாடுகளை நகராட்சி செய்ய வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.