​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
10 லட்சம் கையெறி குண்டுகளை வாங்குகிறது இந்திய பாதுகாப்புத்துறை?

Published : Mar 15, 2019 8:06 PM

10 லட்சம் கையெறி குண்டுகளை வாங்குகிறது இந்திய பாதுகாப்புத்துறை?

Mar 15, 2019 8:06 PM

10 லட்சம் கையெறி குண்டுகளை வாங்க பாதுகாப்புத்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

புல்வாமா தாக்குதலை அடுத்து இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், பல்வகைப் பயன்பாடுகளுக்கு உதவும் வகையில் இந்தியாவில் தயாரிக்கப்படும் 10 லட்சம் கையெறி குண்டுகளை வாங்க இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் ஆலோசிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 500 கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தம் மேற்கொண்டு கையெறி குண்டுகளை வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.