​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பொள்ளாச்சி வன்கொடுமை மனிதச் சங்கிலி போராட்டம்

Published : Mar 15, 2019 8:00 PM

பொள்ளாச்சி வன்கொடுமை மனிதச் சங்கிலி போராட்டம்

Mar 15, 2019 8:00 PM

தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னை மற்றும் பொள்ளாச்சியில் மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

சென்னை திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் வாலாஜா சாலையில் பெண்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள், தன்னார்வலர்கள் என சுமார் 750 பேர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கவும், தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் எனவும் கோஷங்கள் எழுப்பினர்.