​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வாரணாசியில் போட்டியிடும் மோடியை வீழ்த்த காங்கிரஸ் வியூகம்

Published : Mar 15, 2019 7:54 PM

வாரணாசியில் போட்டியிடும் மோடியை வீழ்த்த காங்கிரஸ் வியூகம்

Mar 15, 2019 7:54 PM

உத்திரப்பிரதேசத்தில், பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில், மூன்று நாட்கள், கங்கை நதியின் வழியே படகில் பயணித்து, பொதுமக்களை சந்தித்து, பிரியங்கா காந்தி வாக்குசேகரிக்க உள்ளார்.

உத்திரப்பிரதேசத்தில், யாருடனும் கூட்டணி இல்லாத நிலையில், காங்கிரஸ் தனக்கான இடத்தை தக்கவைக்க முயற்சி மேற்கொண்டுள்ளது.

உத்தரப்பிரதேச காங்கிரசின் கிழக்கு மண்டல பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ள பிரியங்கா காந்தி, பாஜகவுக்கு எதிராகவும், மோடிக்கு எதிராகவும், தீவிர பரப்புரையை முன்னெடுக்கத் தொடங்கியுள்ளார்.

மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில், மூன்று நாட்கள், கங்கை நதியில் படகில் பயணித்து, பொதுமக்களை சந்திக்கும் பிரியங்கா காந்தி, பரப்புரை மேற்கொள்ள உள்ளார்.

அலகாபாத் என அழைக்கப்பட்டு வந்த பிரயாக்ராஜில், திங்கட்கிழமை தனது பரப்புரை பயணத்தை பிரியங்கா காந்தி தொடங்குகிறார். இவரது பயணத்திற்கு, கங்கா யாத்ரா என தலைப்பிடப்பட்டுள்ளது.

கங்கை நதியோரம் அமைந்துள்ள பெரிய ஊர்கள், சிற்றூர்கள், நகரங்களை தொட்டுச் செல்லும் பிரியங்கா காந்தியின் 140 தொலைவுடைய "கங்கா யாத்ரா" வாரணாசியில் நிறைவு பெறுகிறது.