​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நெல்லை - சீவலப்பேரி தாமிரபரணி ஆற்று மணல் குவாரிகளுக்கு இடைக்கால தடை

Published : Mar 15, 2019 7:39 PM

நெல்லை - சீவலப்பேரி தாமிரபரணி ஆற்று மணல் குவாரிகளுக்கு இடைக்கால தடை

Mar 15, 2019 7:39 PM

நெல்லை மாவட்டம் சீவலப்பேரி தாமிரபரணி ஆற்றுபடுகையில் சட்டவிரோதமாக செயல்படும் மணல் குவாரிகளுக்கு இடைக்கால தடைவிதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவில், தாமிரபரணி ஆற்றுப்படுகையில் குருமண் அள்ளுவதற்கு அனுமதி பெற்றுவிட்டு ஆற்று மணல் அள்ளப்படுவதாகவும் அதுகுறித்து பலமுறை புகாரளித்தும் மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே குருமண் குவாரிகளை மூட உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டிருந்தது.

இதேபோல் ராமநாதபுரம் மாவட்டத்தில் சவுடு மண் அள்ள அனுமதி பெற்றுவிட்டு ஆற்று மணல் திருடப்படுவதாகவும் எனவே அங்குள்ள மணல் குவாரிகளை ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும் என மற்றொரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

மனுக்களை விசாரித்த நீதிபதிகள், சீவலப்பேரி தாமிரபரணி ஆற்று படுகையில் சட்டவிரோதமாக செயல்பட்டுவரும் மணல் குவாரிகளுக்கு இடைக்கால தடை விதித்தனர்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் சவுடுமண் குவாரிகளுக்கு அனுமதி வழங்கவும் தடைவிதித்து வழக்கினை இரண்டு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.