​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நிரந்தர முகவரி இருந்தால்தான் ஓட்டுநர் உரிமம்? மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

Published : Mar 15, 2019 7:24 PM

நிரந்தர முகவரி இருந்தால்தான் ஓட்டுநர் உரிமம்? மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

Mar 15, 2019 7:24 PM

நிரந்தர முகவரி இருந்தால்தான்  ஓட்டுநர் உரிமம் அளிக்கப்படும் என்ற தமிழக போக்குவரத்து துறையின் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மோட்டார் வாகன சட்டத்திற்கு விரோதமாக தமிழக போக்குவரத்து துறை பிறப்பித்த இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணகுமார், மனு தொடர்பாக 2 வாரங்களில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளார்.