​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பக்தர்களை நோக்கி லட்டுகள்..! ஹோலி பண்டிகையில் கோலாகலம்

Published : Mar 15, 2019 7:18 PM

பக்தர்களை நோக்கி லட்டுகள்..! ஹோலி பண்டிகையில் கோலாகலம்

Mar 15, 2019 7:18 PM

உத்தரப்பிரதேசத்தில் ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின் தொடக்க நிகழ்ச்சியாக பக்தர்களை நோக்கி லட்டுக்களை வீசும் திருவிழா உற்சாகமாக நடைபெற்றது.

உத்தரப்பிரதேசத்தின் பர்சானா நகருக்கு கிருஷ்ண பகவானே வந்து ஹோலிப் பண்டிகை கொண்டாடியதாக பக்தர்களால் நம்பப்படுகிறது.

ஹோலிப் பண்டிகை பிற மாநிலங்களில் ஒரு நாள் கொண்டாட்டமாக இருந்தாலும் பர்சானாவில் 10 நாட்கள் கொண்டாட்டம் களைகட்டும்.

ஹோலிப் பண்டிகை தொடக்க நிகழ்வாக ஸ்ரீராதா ராணி கோவில் கோபுரத்தில் இருந்து பிரசாதமான லட்டு எறியப்பட்டது. இதைப் போட்டி போட்டுக் கொண்டு பக்தர்கள் பிடித்து சுவைத்தனர். வண்ணப் பொடிகளைத் தூவி, பாடி, ஆடி உற்சாகமாக வசந்தத்தை வரவேற்றனர்.