​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
புதுச்சேரி தொகுதியை கைப்பற்ற காங்கிரஸ் தீவிரம்..!

Published : Mar 15, 2019 7:15 PM

புதுச்சேரி தொகுதியை கைப்பற்ற காங்கிரஸ் தீவிரம்..!

Mar 15, 2019 7:15 PM

நாடாளுமன்ற தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், புதுச்சேரி மாநில காங்கிரஸ் சார்பில் கட்சி தலைமையகத்தில் கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாநிலத் தலைவர் நமச்சிவாயம், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள், முக்கிய நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் நாராயணசாமி, இலவச அரிசி திட்டம், ஸ்மார்ட்சிட்டி, விவசாயிகள் கடன் ரத்து உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருவதாக தெரிவித்தார். வருகிற 16, 17 மற்றும் 18 தேதிகளில் புதுச்சேரி முழுவதும் பிரச்சாரம் நடத்த உள்ளதாகவும் அவர் கூறினார்.