​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
300 கிறிஸ்தவ பாதிரியார்கள் அதிமுகவில் இணைந்தனர்

Published : Mar 15, 2019 5:50 PM

300 கிறிஸ்தவ பாதிரியார்கள் அதிமுகவில் இணைந்தனர்

Mar 15, 2019 5:50 PM

அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்து 300 பாதிரியார்கள் அக்கட்சியில் இணைந்தனர். பசுமை வழிச்சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லத்துக்கு வருகை தந்த இந்திய கிறிஸ்துவ பேரமைப்பின் தலைவர் ஜான் தலைமையிலான 300 பாதிரியார்கள், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தனர்.

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக கிறிஸ்தவ மக்களிடையே பிரச்சாரம் செய்ய உள்ளதாக அவர்கள் உறுதி அளித்தனர். அப்போது அமைச்சர் பாஸ்கரன், சிவகங்கை எம்.பி செந்தில்நாதன், உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.