​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இளம்பெண்ணை வீடியோ எடுத்து மிரட்டிய கயவன் கைது

Published : Mar 15, 2019 5:47 PM

இளம்பெண்ணை வீடியோ எடுத்து மிரட்டிய கயவன் கைது

Mar 15, 2019 5:47 PM

சென்னையில் இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றிய எம்.பி.ஏ பட்டதாரி இளைஞர், அந்த பெண்ணோடு தனிமையில் இருந்தபோது எடுத்த வீடியோவை வைத்து மிரட்டி வந்த நிலையில், கைது செய்யப்பட்டிருக்கிறான்.

திருவள்ளூர் மாவட்டம் பத்தியால் பேட்டையைச் (Pathiyal Pettai) சேர்ந்த ஜெயபிரகாஷ் எம்.பி.ஏ பட்டதாரி ஆவான். 

இவன், திருநின்றவூரில் உள்ள தனியார் கல்லூரியில், பிபிஏ படித்தபோது, தன்னோடு படித்த மாணவியை காதலித்துள்ளான்.

இருவரும் தனிமையில் இருந்தபோது, வலுக்கட்டாயப்படுத்தி, பாலியல் உறவு வைத்த ஜெயப்பிரகாஷ், அதனை வீடியோ எடுத்து மிரட்டுவதாக, பட்டாபிராம் காவல்நிலையத்தில் அளித்த புகாரில் அந்த பெண் தெரிவித்துள்ளார்.

அவனது தொடர் மிரட்டல்களுக்கு பயந்து, தனது தாயாரின் நிர்வாணப் படத்தையும் இ-மெயிலில் அனுப்பி வைத்ததாக அந்த அபலை பெண் கூறியுள்ளார்.

இதுபற்றி தனது பெற்றோர் தட்டிக்கேட்டபோது, 3 நண்பர்களுடன் சேர்ந்து, தன் மீது ஆசிட் வீசிவிடுவதாக, ஜெயப்பிரகாஷ் மிரட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த ஆவடி அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார், எம்.பி.ஏ பட்டதாரி ஜெயப்பிரகாசை கைது செய்து, சிறையிலடைத்தனர்.