​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இரட்டை இலை சின்னம் இ.பி.எஸ்-ஓ.பி.எஸ் அணிக்கு ஒதுக்கியது சரியே - உச்சநீதிமன்றம்

Published : Mar 15, 2019 5:43 PM

இரட்டை இலை சின்னம் இ.பி.எஸ்-ஓ.பி.எஸ் அணிக்கு ஒதுக்கியது சரியே - உச்சநீதிமன்றம்

Mar 15, 2019 5:43 PM

இ.பி.எஸ்-ஓ.பி.எஸ் தரப்பிற்கு இரட்டை இலைச் சின்னம் ஒதுக்கப்பட்டதற்கு தடை விதிக்க மறுத்துள்ள உச்சநீதிமன்றம், இதுகுறித்து, வருகிற 25ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு, தலைமை தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

இ.பி.எஸ்-ஓ.பி.எஸ் தரப்பிற்கு இரட்டை இலைச் சின்னம் ஒதுக்கிய தேர்தல் ஆணையத்தின் உத்தரவை சரியென தீர்ப்பளித்த டெல்லி உயர்நீதிமன்றம், டிடிவி தினகரனின் மனுவை தள்ளுபடி செய்து ஆணையிட்டிருந்தது.

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த டிடிவி தினகரன், இடைக்காலமாக குக்கர் சின்னம் ஒதுக்க வேண்டும் என கோரியிருந்தார். இந்த மனு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கண்ணா அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, இ.பி.எஸ்-ஓ.பி.எஸ் தரப்பிற்கு இரட்டை இலைச் சின்னம் ஒதுக்கப்பட்டதற்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். இந்த வழக்குத் தொடர்பாகவும், குக்கர் சின்னத்தை இடைக்காலமாக ஒதுக்குவது தொடர்பாகவும், வருகிற 25ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு, தலைமை தேர்தல் ஆணையத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.