​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்திற்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை நீக்கம்

Published : Mar 15, 2019 1:29 PM

கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்திற்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை நீக்கம்

Mar 15, 2019 1:29 PM

கிரிக்கெட் விளையாட இந்திய அணி வீரர் ஸ்ரீசாந்த்திற்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடையை நீக்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2013ம் ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டியின்போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஸ்ரீசாந்த் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, கிரிக்கெட் போட்டிகளில் விளையாட ஸ்ரீசாந்த்திற்கு பிசிசிஐ வாழ்நாள் தடை விதித்தது. தடையை நீக்கக்கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் ஸ்ரீசாந்த் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஸ்ரீசாந்த் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஸ்ரீசாந்த்திற்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது. போட்டிகளில் அவர் விளையாடுவது குறித்து 3 மாதங்களுக்குள் பிசிசிஐ முடிவு எடுக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.