​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பயணிகளிடம் பணம் பறிப்பு: 2 பேருக்கு பொதுமக்கள் அடி,உதை

Published : Mar 15, 2019 7:28 AM

பயணிகளிடம் பணம் பறிப்பு: 2 பேருக்கு பொதுமக்கள் அடி,உதை

Mar 15, 2019 7:28 AM

நாகர்கோவிலில் பயணிகளிடம் பணத்தை திருடியதாகக் கூறி இரண்டு நபர்களை பிடித்த பொதுமக்கள் அவர்களை சரமாரியாக அடித்து உதைத்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில், பயணிகளிடம் இரண்டு நபர்கள் பணம் திருடியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் குடிபோதையில் இருந்த அந்த இரண்டு நபர்களையும் பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். பின்னர் அவர்கள் இரண்டு பேரையும் தப்பித்துவிடாதபடி பேருந்து நிலையத்திலேயே முடக்கியும் வைத்தனர்.

image

அப்போது அந்த கூட்டத்திலிருந்த ஒருவர் அந்த போதை ஆசாமிகளுக்கு சாதகமாக பொதுமக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் மேலும் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அந்த நபரையும் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். 

பின்னர் போதை ஆசாமிகளுள் ஒருவர், தனக்கு சாதகமாக பேசிய நபரையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இப்படியாக ஆளாளுக்கு ஒருவரை ஒருவர் மூர்க்கத்துடன் தாக்கிக்கொண்டதால் அந்த பகுதியில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் பொதுமக்கள் வேடிக்கை பார்த்தனர்.

இதையடுத்து தகவல் அறிந்துவந்த காவல்துறையினரிடம் அந்த நபர்கள் ஒப்படைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் பேருந்து நிலையத்தில் சில மணி நேரம் பரபரப்பு நிலவியது.