​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நெல்லை அரசு பொறியியல் கல்லூரி ஆண்டு விழாவில் மாணவர்களுக்கிடையே மோதல்

Published : Mar 15, 2019 7:26 AM

நெல்லை அரசு பொறியியல் கல்லூரி ஆண்டு விழாவில் மாணவர்களுக்கிடையே மோதல்

Mar 15, 2019 7:26 AM

நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில் ஆண்டு விழாவின் போது மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலையடுத்து கல்லூரிக்கு 5 நாட்கள் விடுமுறை அளித்து கல்லூரி முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

நெல்லை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அரசினர் பொறியியல் கல்லூரியில் துளிர் என்ற தலைப்பில் ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் நடனம் ஆடுவதில் மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டு மாணவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் மோதலாக வெடித்தது.

இதனை அடுத்து அங்கு வந்த பெருமாள்புரம் காவல்துறையினர் ரகளையில் ஈடுபட்ட 2 மாணவர்களை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர் இதனை அடுத்து கல்லூரி முதல்வர் 5 நாட்கள் விடுமுறை அளித்து உத்தரவிட்டார்.