​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
விழுப்புரம் அருகே வீட்டு வாடகை வசூலிப்பதில் தகராறு - கத்தியால் குத்தி இளைஞர் படுகொலை

Published : Mar 15, 2019 7:19 AM

விழுப்புரம் அருகே வீட்டு வாடகை வசூலிப்பதில் தகராறு - கத்தியால் குத்தி இளைஞர் படுகொலை

Mar 15, 2019 7:19 AM

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் வீட்டு வாடகை வசூலிப்பதில் ஏற்பட்ட  தகராறில் கத்தியால் குத்தி ஒருவர் கொலை செய்யப்பட்டார்.

திண்டிவனம் சேடன்குட்டை பகுதியை சேர்ந்த சந்திரசேகரன் என்பவர் தனது நண்பரான சென்னையை சேர்ந்த ராஜா என்பவரின் வீட்டை  வெங்கடேசனுக்கு வாடகைக்கு விட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு 9 மணி அளவில்  சந்திரசேகரன்  வாடகை வசூல் செய்ய சென்றுள்ளார். அப்போது வெங்கடேசனுக்கும் சந்திரசேகரனுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரம் அடைந்த வெங்கடேசன் கத்தியால் குத்தியதில் சந்திரசேகரன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.