​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
டேவிஸ் கோப்பைத் தொடரில் லியாண்டர் பயஸ் புதிய சாதனை

Published : Apr 07, 2018 8:08 PM

டேவிஸ் கோப்பைத் தொடரில் லியாண்டர் பயஸ் புதிய சாதனை

Apr 07, 2018 8:08 PM

டேவிஸ் கோப்பை டென்னிஸ் இரட்டையர் பிரிவில் 43 வது வெற்றியை ருசித்ததன் மூலம் புதிய உலக சாதனையை இந்தியாவின் லியாண்டர் பயஸ் படைத்துள்ளார்.

107 வது டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி சீனாவின் Tianjin  நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற Asia/Oceania Group 1 இரட்டையர் பிரிவில் ரோஹன் போபன்னாவுடன் இணைந்து சீனாவின் Mo Xin Gong மற்றும் Ze Zhang இணையை லியாண்டர் பயஸ் எதிர்கொண்டார்.

மிகக் கடுமையாக நடைபெற்ற ஆட்டத்தில் 5-7, 7-6, 7-6 என்ற செட் கணக்குகளில் லியாண்டர் பயஸ் ரோஹன் போபன்னா இணை வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம், டேவிஸ் கோப்பைத் தொடரில், இரட்டையர் பிரிவில் 42 வெற்றிகளைக் குவித்திருந்த இத்தாலியின் Nicola Pietrangeli யின் சாதனையை லியாண்டர் பயஸ் முறியடித்துள்ளார்.