​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருநாவுக்கரசுவின் தாய் தாக்கல் செய்த ஜாமின் மனு தள்ளுபடி

Published : Mar 12, 2019 1:17 PM

திருநாவுக்கரசுவின் தாய் தாக்கல் செய்த ஜாமின் மனு தள்ளுபடி

Mar 12, 2019 1:17 PM

பெண்களை மிரட்டி ஆபாச வீடியோ எடுத்த வழக்கில், திருநாவுக்கரசுவுக்கு ஜாமின் வழங்க, பொள்ளாச்சி குற்றவியல் நீதிமன்றம் மறுத்து விட்டது. 

திருநாவுக்கரசுவுக்கு ஜாமின் வழங்க கோரி அவனது தாயார் செல்வி, பொள்ளாச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு, நீதித்துறை நடுவர் ஆறுமுகம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இரு தரப்பு வாதங்களைக் கேட்ட அவர், திருநாவுக்கரசு தலைமறைவாக இருந்தது மற்றும் அவனிடம் இருந்து இரண்டு செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது ஆகியவற்றைக் காரணம் காட்டி ஜாமின் வழங்க மறுத்து விட்டார்.

செல்போன்கள் ஆராயப்பட்டு  அதன் பின்னரே வழக்கின் தன்மை தெரியும் என்பதால் ஜாமின் மனுவை நீதித்துறை நடுவர் தள்ளுபடி செய்தார். 

இதை அடுத்து நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்த திருநாவுக்கரசுவின் தாய் செல்வி, தனது மகனுக்கு ஆதரவாக கூச்சல் போட்டார். அப்போது அங்கிருந்த வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.