​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
டி.ஜி.பி. ராஜேந்திரனை பணியிட மாற்றம் செய்யக் கோரிய வழக்கு தள்ளுபடி

Published : Mar 12, 2019 1:10 PM

டி.ஜி.பி. ராஜேந்திரனை பணியிட மாற்றம் செய்யக் கோரிய வழக்கு தள்ளுபடி

Mar 12, 2019 1:10 PM

தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரனை பணியிடமாற்றம் செய்ய கோரிய மனுவை தள்ளுபடி செய்துள்ள உயர்நீதிமன்ற மதுரை கிளை, புகார் தொடர்பாக தேர்தல் ஆணையத்தை அணுக மனுதாரருக்கு உத்தரவிட்டுள்ளது.

டிஜிபி ராஜேந்திரன் தேர்தலின் போது மத்திய, மாநில அரசுகளுக்கு சாதகமாக செயல்படலாம் என்றும் எனவே அவர் டிஜிபியாக செயல்பட தடை விதித்து, வேறொரு நியாயமான அதிகாரியை நியமிக்க உத்தரவிட வேண்டும் என்றும் மதுரையைச் சேர்ந்த கதிரேசன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் திங்கட்கிழமை முறையிட்டார்.

அவரது முறையீட்டை மனுவாக தாக்கல் செய்ய நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு உத்தரவிட்டது.

இதனையடுத்து கதிரேசன் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதிகள் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் இதுபோன்ற புகார்களை தேர்தல் ஆணையத்திடம் முறையிட உத்தரவிட்டனர்.

மனுதாரரின் புகாரை ஆவணமாக ஏற்று தீர விசாரித்து தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.