​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு சோதனைகள் முடிக்கப்பட்டு தயார் நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள்

Published : Mar 12, 2019 12:56 PM

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு சோதனைகள் முடிக்கப்பட்டு தயார் நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள்

Mar 12, 2019 12:56 PM

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு காஞ்சிபுரம் கொண்டுவரப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களில் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் அனைத்துக் கட்சியினருக்கான மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.

மாவட்டத்தில் உள்ள 4 ஆயிரத்து 157 வாக்குச்சாவடிக்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்களும் காஞ்சிபுரம் ராஜாஜி மார்க்கெட் அருகிலுள்ள சேமிப்புக் கிடங்கில் சோதனைகள் முடிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

சோதனை முடிக்கப்பட்ட இயந்திரங்களில் சிலவற்றை எடுத்து அனைத்துக் கட்சிப் பிரமுகர்கள் முன்னிலையில் முன் மாதிரி வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி மாவட்ட ஆட்சியர் பொன்னையா முன்னிலையில் நடைபெற்ற மாதிரி வாக்குப்பதிவில் அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.