​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பிரதமர் மோடியை கண்டு தீவிரவாதிகள் பயந்து ஓடுகின்றனர் - ராஜேந்திரபாலாஜி

Published : Mar 10, 2019 3:40 PM

பிரதமர் மோடியை கண்டு தீவிரவாதிகள் பயந்து ஓடுகின்றனர் - ராஜேந்திரபாலாஜி

Mar 10, 2019 3:40 PM

இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி பலப்படுத்தி வருவதால் தீவிரவாதிகள் பயந்து ஓடுவதாகவும், இதனால் இந்தியாவின் டாடியாக மோடி இருப்பதாகவும்  அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை  அடுத்த கோட்டைமேட்டில் நடந்த அதிமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் அவர் கலந்துக் கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, நரேந்திர மோடியை மீண்டும் பிரதமராக்கவே, அதிமுக தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது என்றார்.