​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தீவிபத்தில் உயிரிழந்த 23 பேரின் உருவப்படத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் மலர்தூவி மரியாதை

Published : Mar 10, 2019 3:35 PM

தீவிபத்தில் உயிரிழந்த 23 பேரின் உருவப்படத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் மலர்தூவி மரியாதை

Mar 10, 2019 3:35 PM

குரங்கணி தீ விபத்தில் உயிரிழந்த 23 பேரின் உருவப்படத்திற்கு தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே கடந்த ஆண்டு குரங்கணி மலைப்பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அப்போது மலையேற்றத்திற்கு சென்ற 23 பேர் தீயில் சிக்கி உயிரிழந்தனர். தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் 23 பேரின் உருவப்படத்திற்கு தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். உயிரிழந்தவர்களை நினைவு கூறும் வகையில் 30 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.பின்னர், போடிநாயக்கனூர் பேருந்து நிலையம் அருகே குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கி போலியோ சொட்டு மருந்து முகாமினை துவங்கி வைத்தார்.