​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
விதவைப் பெண்ணை கத்தியால் குத்திக் கொன்ற நபர் கைது

Published : Mar 10, 2019 3:35 PM

விதவைப் பெண்ணை கத்தியால் குத்திக் கொன்ற நபர் கைது

Mar 10, 2019 3:35 PM

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பெண்ணை கத்தியால் குத்திக் கொன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

சிறுவத்தூரை சேர்ந்த கொடிபவுன் என்ற விதவைப் பெண், அதே பகுதியில் உள்ள கல்குவாரியில் கூலி வேலை செய்து வந்தார்.

இவருடன் வேலை செய்த ராமு என்பவருடன், கொடிபவுனுக்கு நெருக்கமான பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மூத்த மகளின் திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருவதால், ராமுவுடனான பேச்சுவார்த்தையை கொடிபவுன் நிறுத்தியதால், கடந்த 2 நாட்களாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதனால் ஆத்திரம் அடைந்த ராமு, இன்று காலை வேலைக்கு நடந்து சென்றுக் கொண்டிருந்த கொடிபவுனை வழிமறித்து, கத்தியால் சரமாரியாக குத்திக் கொலை செய்துள்ளார்.

பின்னர் தலைமறைவான கொலையாளி ராமுவை போலீசார் கைது செய்தனர்.