​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நடிகை சோனாக்சி சின்ஹாவை மோசடி வழக்கில் கைது செய்ய இடைக்காலத் தடை

Published : Mar 10, 2019 7:48 AM

நடிகை சோனாக்சி சின்ஹாவை மோசடி வழக்கில் கைது செய்ய இடைக்காலத் தடை

Mar 10, 2019 7:48 AM

நடிகை சோனாக்சி சின்ஹாவை மோசடி வழக்கில் கைது செய்யும் நடவடிக்கைக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

பாலிவுட்டின் முன்னணி நடிகையான இவர், நிகழ்ச்சி ஒன்றுக்கு ஒப்புக் கொண்டு வராமல் 37 லட்சம் ரூபாய் முன் பணத்தையும் திருப்பித் தராமல் மோசடி செய்ததாக மோர்தாபாத் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

சோனாக்சியை கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதை எதிர்த்து அவரது தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் சோனாக்சியை கைது செய்ய இடைக்காலத் தடை விதித்து அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதே நேரத்தில் விசாரணைக்கு சோனாக்சி ஒத்துழைக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.