​​ எந்த கண்காணிப்பு கேமராக்களிலும் பதிவாகாத கொலையாளிகள் உருவம், கொலையாளி யார் ?
Polimer News
Polimer News Tamil.
Advertisement
எந்த கண்காணிப்பு கேமராக்களிலும் பதிவாகாத கொலையாளிகள் உருவம், கொலையாளி யார் ?


எந்த கண்காணிப்பு கேமராக்களிலும் பதிவாகாத கொலையாளிகள் உருவம், கொலையாளி யார் ?

Apr 07, 2018 2:44 AM

சென்னை வடபழனி பெண் கொலை வழக்கில் கொலை நடந்ததாக கூறப்படும் நேரத்தில் அந்த பகுதியில் உள்ள எந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளிலும் கொலையாளிகள் உருவம் பதிவாகவில்லை என தெரிவித்துள்ள போலீசார் இது குறித்து பெண்ணின் கணவர் குருக்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சென்னை வடபழனி சிவன் கோயில் தெருவை சேர்ந்த கோயில் குருக்கள் வீட்டின் வெளியே உள்ள குளியறையில் காயத்துடன் கை, கால் கட்டப்பட்டு கிடந்த நிலையில், அடித்து கொலை செய்யப்பட்ட அவரது மனைவி ஞானப்ரியாவின் சடலம் வீட்டிற்குள் கிடந்தது. அவர் கழுத்தில் இருந்த தாலி சரடு உட்பட 13 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து 4 தனிப்படைகளை அமைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். கொலையான பெண்ணின் கணவர் குருக்கள் பிரபு போலீசாரிடம் தெரிவித்த தகவலை வைத்து தான் கொலையாளிகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

ஆனால் அவர் சொன்ன தகவலில் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளதால் மனைவியின் இறுதி சடங்கிற்கு சொந்த ஊரான காஞ்சிபுரம் சென்றுள்ள குருக்கள் பிரபுவிடம் மீண்டும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். கொலை நடந்த அன்று வீட்டிற்கு வெளியில் முதல் தளத்தில் இருந்த கழிவறைக்கு செல்ல பிரபு கதவை திறந்து வந்ததாகவும் அப்போது தான் 2 நபர்கள் பின்னால் இருந்து இரும்பு ராடால் தாக்கிவிட்டு கை, கால்களை கட்டிப்போட்டதாகவும், அதன் பின்னர் நடந்தது தனக்கு நினைவில் இல்லை என்றும் தனது வாக்குமூலத்தில் குருக்கள் பிரபு தெரிவித்திருந்தார்.

பிரபு வெளியில் வந்ததாக கூறப்படும் நள்ளிரவு 1.30 மணிக்கு கதவை திறந்து அவர் வருவார் என கொலையாளிகளுக்கு எப்படி தெரியும் என போலீசார் சந்தேகம் எழுப்புகின்றனர். அதே வேளையில் கொலை நடந்த வீட்டிற்கு அருகில் சிசிடிவி கேமராக்கள் இல்லை என்றாலும், அந்த தெருவின் மற்ற பகுதிகளில் உள்ள 5 சிசிடிவி கேமரா காட்சிகளில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் கொலை நடந்ததாக கூறப்படும் நேரத்திற்கு முன்னரும், பின்னரும் வந்து செல்வது போன்ற காட்சிகளும் பதிவாகவில்லை என்கிறனர் விசாரணை நடத்தும் போலீசார்.

கொலை நடந்த நள்ளிரவு 1.30 மணியிலிருந்து கை, கால்கள் மட்டும் கட்டப்பட்டு குருக்கள் பிரபு வீட்டின் உரிமையாளர் வந்து காலை 6 மணிக்கு பார்க்கும் வரை கிடந்துள்ளார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது வலிப்பு ஏற்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் கூறினர், ஆனால் குருக்கள் பிரபு தனக்கு சாமி வந்ததாக கூறியுள்ளார். இந்த சந்தேகங்களுக்கு விசாரணை நடத்தி விடை தேடினால் தான் கொலையாளி யாரென்பது தெரியும் என்கின்றனர் காவல் துறையினர்.

இதனிடையே, சம்பவம் நடந்த தினத்துக்கு முந்தைய நாட்களில் நோட்டமிடுவதற்காக அப்பகுதியில் சந்தேகத்துக்கு இடமான நபர்கள் யாரேனும் நடமாடினார்களா? என 12 சிசிடிவிக்களில் பதிவான காட்சிகளைக் கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.