​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குடிநீர் என நினைத்து ஆசிட்டை குடித்த பள்ளி மாணவி - சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மாணவி

Published : Mar 07, 2019 4:53 PM

குடிநீர் என நினைத்து ஆசிட்டை குடித்த பள்ளி மாணவி - சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மாணவி

Mar 07, 2019 4:53 PM

டெல்லியில், குடிநீர் என நினைத்து ஆசிட்டை குடித்த பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி, ஹார்ஷ் விகார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், 4 மற்றும் 5வது படிக்கும் மாணவிகள் மதிய உணவுவின் போது ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டனர்.

அப்போது, 5ம் வகுப்பு மாணவி சஞ்சனா, 4ம் வகுப்பு மாணவி கொண்டு வந்த பாட்டிலை எடுத்து தண்ணீர் குடித்தார். அந்த பாட்டிலில் தண்ணீருக்கு பதிலாக ஆசிட் இருந்ததால், அதை குடித்த மாணவி சஞ்சனா அலறித் துடித்தார்.உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சஞ்சனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தண்ணீர் பாட்டிலும், ஆசிட் பாட்டிலும் ஒரே மாதிரி இருந்ததால், ஆசிட் இருந்த பாட்டிலை மாணவி மாற்றி எடுத்து வந்ததால், இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.