​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சிவராத்திரி உற்சவத்தில் மாட்டு வண்டி பந்தயம்

Published : Mar 07, 2019 3:48 PM

சிவராத்திரி உற்சவத்தில் மாட்டு வண்டி பந்தயம்

Mar 07, 2019 3:48 PM

சிவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. திருமயம் அருகே உள்ள நெய்வாசல் திட்டாணிக் கருப்பர் கோவிலில், மஹா சிவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.

  இதில் சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், தேனி, இராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 35 ஜோடி மாட்டுவண்டிகள் கலந்து கொண்டன. வெற்றி பெற்ற மாட்டுவண்டி உரிமையாளர்களுக்கு கோப்பை, ரொக்க பணம் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.