​​ பேச்சுவார்த்தைக்கு தயார், தயாரிப்பாளர்களுக்கு QUBE அழைப்பு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பேச்சுவார்த்தைக்கு தயார், தயாரிப்பாளர்களுக்கு QUBE அழைப்பு


பேச்சுவார்த்தைக்கு தயார், தயாரிப்பாளர்களுக்கு QUBE அழைப்பு

Feb 06, 2018 2:29 PM

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் போராட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகும் முன்னரே, திரைபடங்களை டிஜிட்டல் முறையில் வெளியிடும் கியூப் நிறுவனம் சமரசத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது

தமிழ்த் திரைப்படங்களை டிஜிட்டல் முறையில் திரையிடும் கியூப் நிறுவனத்தின் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி, தயாரிப்பாளர் சங்கத்தினர் மார்ச்1 ந்தேதி முதல் புதிய படங்களை வெளியிடுவதை நிறுத்தி, போராட்டம் நடத்தப் போவதாக தகவல் வெளியானது. இதையடுத்து, தயாரிப்பாளர் சங்கம் பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் அமர்ந்து பேசத்தயார் என்றும், ஆனால் பேச்சுவார்த்தைக்கு அழைக்காமல் நேரடியாக போராட்டம் என்பது ஏன் எனவும் கியூப் இயக்குனர் செந்தில்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்

ஒரு காட்சிக்கு 375 ரூபாய் மட்டுமே திரையிட கட்டணமாக வசூலிக்கின்ற நிலையில், அதைக் குறைக்கவேண்டும் என்பது ஏன் ? என்றும், தயாரிப்பாளர்களின் நலன்கருதி, உலக அளவில் குறைந்த கட்டணத்தில் டிஜிட்டல் முறையில் திரைப்படங்களை தாங்கள் திரையிட்டுக் கொடுத்துவருவதாகவும் தெரிவித்தார் செந்தில்குமார்..

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தென்காசியில் படப்பிடிப்பில் இருப்பதால் , அவர் சென்னை திரும்பியதும் தயாரிப்பாளர்களின் இந்த போராட்டம் குறித்த அறிவிப்பு அதிகாரப் பூர்வமாக வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ள நிலையில், பேச்சுவார்த்தை மூலம் சமரச தீர்வை எட்டுவதற்கு கியூப் இயக்குனர் அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.