​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
விளம்பர பதாகைகளுக்கு பகுஜன் சமாஜ் புதிய கட்டுப்பாடு

Published : Mar 06, 2019 12:27 PM

விளம்பர பதாகைகளுக்கு பகுஜன் சமாஜ் புதிய கட்டுப்பாடு

Mar 06, 2019 12:27 PM

விளம்பர பதாகைகளில் வேட்பாளர்களின் புகைப்படங்களை பெரிய அளவில் பொறிக்கக்கூடாது என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தனது கட்சியினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

மக்களவை தேர்தல் தொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சியினருக்கு அக்கட்சியின் தலைவர் மாயாவதி சார்பில் புதிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அதன்படி, அக்கட்சியின் சார்பில் வைக்கப்படும் விளம்பர பதாகைகள் மற்றும் போஸ்டர்களில் வேட்பாளர்கள் தங்களது புகைப்படங்களை பெரிய அளவில் பொறிக்கக்கூடாது எனவும் மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கட்சி அலுவலகத்தில் உரிய அனுமதி பெற்ற பின்னரே பதாகைகளை வைக்கவேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.